Thaipusam Festival: சேவல் கொடி பறக்குதுடா... திருத்தணி முருகனை காணக்குவிந்த பக்தர்கள்
🎬 Watch Now: Feature Video
திருவள்ளூர்: திருத்தணியில் உள்ள முருகன் கோயில் முருகப்பெருமானின் பிரசித்திபெற்ற ஐந்தாம் படை திருக்கோயிலாகும். இங்கு தைப்பூசத்தை முன்னிட்டு இன்று அதிகாலையில் மூலவருக்கு பால், பழம், பஞ்சாமிர்தம், திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவசம், தங்கவேல், வைர ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் காவடி எடுத்து வந்தும், மொட்டை அடித்தும் முருகப்பெருமானுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். தைப்பூசத்தை முன்னிட்டு மலைக்கோயிலில் பக்தர்கள் முன்னிலையில், காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மாலையில் உற்சவர் முருகப்பெருமான் மலைக்கோயில் மாட வீதியில் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.