Mekedatu Dam issue: மேகதாதுவில் அணை கட்டினால் இடிப்போம்: விவசாய சங்கத் தலைவர் வேலுச்சாமி ஆவேசம்! - கர்நாடகாவில் மேகதாது அணை

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 1, 2023, 10:19 AM IST

திருவண்ணாமலை: கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி
பெற்று ஆட்சி அமைத்தது. இதில் முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் பதவி ஏற்றனர். இந்நிலையில் துணை முதல்வராக உள்ள டி.கே.சிவகுமாருக்கு அம்மாநிலத்தின் நீர்வளத் துறை அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கர்நாடகாவில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் டி.கே.சிவகுமார் காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதி அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப்படும் எனவும், நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட மேகதாது ஆணை(Mekedatu Dam) கட்ட ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து அணை கட்ட முயற்சி செய்வேன் என்றும் தெரிவித்தார். 

அதனை தொடர்ந்து, இதற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் விவசாய சங்கத்தினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக விவசாய சங்கத் தலைவர் வேலுச்சாமி, "கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட முயற்சி செய்வோம் என்று டி.கே.சிவகுமார் தெரிவித்ததற்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகமே பாலைவனம் ஆகும் என்றும் இந்த நிலை உருவாகாமல் இருக்க தமிழக அரசு சார்பில் சட்ட வல்லுனர்களிடம் ஆலோசித்து சட்ட போராட்டம் நடத்த வேண்டும் என்றும் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்தார். அதையும் மீறி கர்நாடகாவில் மேகதாது அணை கட்டினால் தமிழகத்தில் உள்ள
அனைத்து விவசாய சங்கங்கள் மற்றும் விவசாயிகளை வைத்து அணையை இடித்து தகர்த்திடுவோம்" என்றும் எச்சரித்தார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.