கோடை வெயில் காரணமாக வறண்டு காணப்படும் சுருளி அருவி… சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை - அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு
🎬 Watch Now: Feature Video
தேனி: கம்பம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சுருளி அருவி அமைந்துள்ளது. இந்த அருவியின் நீர் பிடிப்புப் பகுதிகளான தூவானம் அணை, அரிசிபாறை, ஈத்தக்காடு வனப்பகுதிகளில் மழைப் பொழிவு இல்லாமல் உள்ளது, மேலும் கடந்த சில நாட்களாக வனப்பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
வனப்பகுதியில் உள்ள நீரூற்றுகளிலும் ஆற்றுப் பகுதிகளிலும் முற்றிலுமாக தண்ணீர் வரத்து இன்றி அருவியில் தண்ணீர் இல்லாமல் வெறும் பாறையாக வறண்ட நிலையில் காட்சியளிக்கின்றது. இதனால் தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து சுருளி அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
சுருளி அருவியில் தண்ணீர் இல்லாததால் வெகு தூரத்தில் இருந்து வந்து ஏமாற்றத்துடன் வந்து திரும்பிச் செல்வதாக சுற்றுலாப் பயணிகள் கூறுகின்றனர். அருவியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழைப்பொழிவு ஏற்படும் வரை சுருளி அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சொத்து பிரச்சனையில் நூதன முறையில் தற்கொலை முயற்சி.. தேனி பகீர் சம்பவம்!