வேலூரில் 50 ஆண்டுகளுக்குப் பின் நடந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி! - பழைய மலரும் நினைவுகளை
🎬 Watch Now: Feature Video
வேலூர்: வெங்கடேஸ்வரா பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி இன்று (ஜூன் 4) மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. தங்களின் பள்ளி நாட்கள் குறித்த மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டு அவற்றை நினைவுக்கூறும் விதமாக நடந்த நிகழ்ச்சியில், 1973-74 ஆம் கல்வியாண்டில் பயின்ற அனைத்து முன்னாள் மாணவர்களும் தவறாமல் கலந்துகொண்டனர்.
இந்த வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் 1973-74 ஆம் கல்வியாண்டுகளில் எஸ்எஸ்எல்சி பயின்ற முன்னாள் மாணவர்கள் 50 ஆண்டுகளுக்கு பிறகு, தங்களது குடும்பத்தினருடன் இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இப்பள்ளியில் படித்து பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது, பள்ளியில் தங்களை பயிற்றுவித்த ஆசிரியர்களையும் அழைத்து வந்து அவர்களுக்கு சால்வை அணிவித்தும் கோப்பைகள் வழங்கி காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர். இதில், பள்ளியின் முதல்வர் நெப்போலியன் பழைய மாணவர்களை வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில், 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பள்ளியில் பயின்ற மாணவர்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
மேலும், வருங்காலங்களில் பள்ளிக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கவும் உறுதியளித்தனர். கடந்த 6 மாதங்களாக முயற்சி மேற்கொண்டு இந்த சந்திப்பை 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சி அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: Karunanidhi 100: கருணாநிதி நூற்றாண்டு விழா.. உட்லண்ட்ஸ் தியேட்டரில் 'பராசக்தி' ரீ ரிலீஸ்.. நடிகர் பிரபு மகிழ்ச்சி!