தமிழ்நாடு ஊர்க்காவல் படையினருக்கான தொழில்சார் போட்டிகள்! வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள்! - கயிறு இழுத்தல் போட்டி
🎬 Watch Now: Feature Video
திருவண்ணாமலை: தமிழ்நாடு ஊர் காவல் படையினருக்கான 28வது மாநில அளவிலான தொழில்சார் போட்டிகள் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் கடந்த மே 19ஆம் தேதி தொடங்கி 3 நாட்கள் வரை நடைபெற்றது. இதில் வேலூர், சேலம், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், திண்டுக்கல், காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 சரகத்தில் இருந்து சுமார் 1,780 ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்டனர்.
இதில் கபடி, கயிறு இழுத்தல் போட்டி, வாலி பால், 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப் பந்தயம், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. மேலும் கவாத்து பயிற்சி, முதலுதவி பயிற்சி, உடற்பயிற்சி தொடர்பான போட்டிகளும் நடைபெற்றது. இந்த நிலையில் மாநில அளவிலான தொழில் சார் போட்டிகள் நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் வேலூர் சரக காவல் துறை துணை தலைவர் முத்துசாமி, திருவண்ணாமலை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஊர்காவல் படை டிஜிபி. பி.கே. ரவி தலைமை தாங்கி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். மேலும் கவாத்து பயிற்சி, முதலுதவி பயிற்சி, உடற்பயிற்சி தொடர்பான போட்டிகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: அகில இந்திய கூடைப் பந்து போட்டி.. இந்திய கப்பல் படை அணி சாம்பியன்!