தஞ்சாவூரில் நாய்கள் கண்காட்சி: 35 வகையான 300 நாய்கள் பங்கேற்பு!
🎬 Watch Now: Feature Video
தஞ்சாவூர்: மிருகவதை தடுப்புச் சங்கம் (SPCA) சார்பில் மாநில அளவிலான நாய்கள் கண்காட்சி (Dog Expo '23) மார்ச் 11ந் தேதி மாலை நடைபெற்றது. இதனையடுத்து தஞ்சை மாதாக்கோட்டை ரோடு, மிருக வதை தடுப்பு சங்கத்தில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் கண்காட்சியை தொடங்கி வைத்தார்கள்.
இதில் சென்னை, திருச்சி, மதுரை, ராமநாதபுரம், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் செல்ல பிராணியான நாயுடன் வந்து கலந்து கொண்டு, நாயை அழகுபடுத்தி மேடையில் பங்கேற்க செய்தனர். இதில் சிட்சூ (சீனா), அலங்கு (தஞ்சாவூர்), கிரேடன், புல்ஸி (அமெரிக்கா), அஸ்கி (சைபீரியன்), லேப்ரடார், டேஸ் ஹண்ட், பூடுல் (ஜப்பான்), புல்டாக் (பிரெஞ்ச்), கன்னி, சிப்பி பாறை, பொமேரியன், ஹெப்பர்டு (ஜெர்மன் ) மற்றும் நாட்டு நாய்கள் என 35 வகையான 300க்கும் மேற்பட்ட நாய்கள் கண்காட்சியில் இடம்பெற்றன.
செல்லப் பிராணிகள் மீதான அன்பை பரிமாறி கொள்ளவும், நாய் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. கண்காட்சியில் சிறந்த நாய்கள் பல்வேறு பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு செல்லப் பிராணிகளின் உரிமையாளர்களுக்கு சான்றிதழும், நினைவுப் பரிசும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.