ஸ்ரீரங்கத்தில் யாளி வாகன சிறப்பு ஆரத்தி!
பூலோக வைகுண்டம் என்ற சிறப்புக் கொண்ட திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் 108 வைணவத்திருத்தலங்களில் முதன்மையானது ஆகும். இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 10 நாள்கள் விருப்பன் திருநாள் எனப்படும் உற்சவர்கள் வலம் விழா தேர் திருநாள் வரை விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று மாலை மூன்றாம் நாள் நம்பெருமாள் சித்திரை தேர் விருப்பன் திருநாள் நம்பெருமாள் யாளி வாகனத்தில் எழுந்தருளினார்.பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST