தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நந்திவர்மனுக்கு சிறப்பு அபிஷேகம்!
தேனி: பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தேனியில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக ஆலய வளாகத்தில் சிவபெருமானுக்கு எதிரே அமைந்திருக்கும் நந்திக்கு பால், தயிர், சந்தனம், தேன், இளநீர் உள்ளிட்ட பல பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதேபோல் லிங்க வடிவில் காட்சியளிக்கும் சிவபெருமானுக்கு பால், தயிர், சந்தனம், தேன் என பல வகை பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் விபூதி காப்பு நடத்தி சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது. மேலும் நந்திவர்மனுக்கு எலுமிச்சை பழ மாலைகளும், அருகம்புல் மாலைகளும், வண்ண வண்ண மலர் மாலைகளும் கொண்டு அலங்கரிக்கப்பட்டது.
அதேபோல் சிவபெருமானுக்கும், வண்ண மலர் மாலைகளால் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சிவபெருமானுக்கு சோடச உபசாரம் நடத்தி மகா தீபாராதனை காட்டப்பட்டது. நேற்று விடுமுறை தினம் என்பதால் தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் பிரதோஷத்தில் கலந்து கொண்டு சிவபெருமானை தரிசித்துச் சென்றனர்.