ஸ்ரீஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்! - வேலூர் மாவட்ட செய்தி
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/640-480-18282726-thumbnail-16x9-vel.jpg)
வேலூர்: பல நூறு வருடங்களுக்கு முன்பாக வசிஷ்டர், அகஸ்தியர், கௌதமர், பரத்வாஜர், வால்மீகி, காசியபர் அத்ரியார் ஆகிய சப்தரிஷிகள் வேலூருக்குக் கிழக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ள பகவதி மலையில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர். பின்னர் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து, “ஸ்ரீஜலகண்டேஸ்வரர்” எனப் பெயரிடப்பட்டது.
இந்நிலையில் வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் இன்று பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்டப் பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.
பின்னர் அருகம்புல், வில்வ இலைகள், மலர் மாலைகளைக் கொண்டு சிறப்பு அலங்காரங்களை செய்து பின்னர் மகா தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் அபிஷேகத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: போலி ஆவணம் மூலம் ரூ.17 லட்சம் ஆட்டைய போட்ட ஜோடி.. வேலூரில் சிக்கியது எப்படி?
இதையும் படிங்க: வேலூர் திருவள்ளுவர் பல்கலை. தேர்வு முடிவில் குழப்பம்.. போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள்!