தஞ்சை பெரிய கோயிலில் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்
🎬 Watch Now: Feature Video
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயில் என்றழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை பெருவுடையார் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இந்த கோயிலில் மாதந்தோறும் நடைபெறும் பிரதோஷ வழிபாடு சிறப்பு வாய்ந்ததாகும்.
இந்த பங்குனி மாத சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு இன்று (ஏப்ரல் 3) கோயில் வளாகத்தில் உள்ள மகா நந்தியம் பெருமானுக்கு பால், சந்தனம், திரவியப்பொடி உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது.
அதன்பின் அருகம்புல், வில்வ இலை, பூக்களால் நந்தியம் பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாரதனை காட்டப்பட்டது. இந்த சிறப்பு அபிஷேகத்தின்போது ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நந்தியம் பெருமானை வழிபட்டு சென்றனர்.
தஞ்சை பெரிய கோயிலில் மூலவர் சன்னதிக்கு முன்பு நந்தி மண்டபம் அமைந்துள்ளது. இந்த நந்தி மண்டபத்தில் மகா நந்தியம் பெருமான் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். பிரதோஷம் அன்று நந்தியும், பெருமானை வழிப்பட்டால் சகல ஐஸ்வர்யங்கள் கிட்டும், தோஷங்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.