ஸ்ரீவெங்கடேச பெருமாளுக்கு உதவிய குபேரர்..வரலாறு கூறுவது என்ன? - தங்ககாசுகள்
🎬 Watch Now: Feature Video
வேலூர்: வேலூரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான ஸ்ரீவெங்கடேச பெருமாள் ஆலயத்தில் இன்று (ஜூலை 15) ஸ்ரீவெங்கடேச பெருமாள், பத்மாவதி தாயாரை திருமணம் செய்து கொள்ள பெண் கேட்ட போது, தாயாரின் தந்தை ஏழுமலைகளின் அரசின் பெரிய அளவில் தங்கக்காசுகளை கேட்டார்.
அதற்காக, வெங்கடேச பெருமாள் குபேரரை சந்தித்து அவரிடமிருந்து 1.4 லட்சம் ராமமுத்திரை பொறிக்கப்பட்ட பொற்காசுகளை கடனாக பெற்று அதனை ஒரு யுகத்திற்கு வட்டியும், முதலுமாக அளிப்பதாகக் கூறி, அந்த பொற்காசுகளை கொண்டு பத்மாவதி தாயாரை திருமணம் செய்தார் என வரலாறு கூறுகிறது.
அந்த வகையில் அந்த கடனை, ஆண்டுதோறும் வெங்கடேச பெருமாள் குபேரனுக்கு திருப்பி செலுத்துவதை நினைவு கூறும் விதமாக இன்று வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனைகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் “கோவிந்தா கோவிந்தா” என முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க:பெண்களின் புகைப்படங்களை ஆன்லைனில் விற்பனை செய்த இளைஞர் கைது.. எச்சரிக்கை விடும் காவல் துறை!