வீடியோ: கீரனூர் அருகே ஜல்லிக்கட்டு கோலாகலம்.. 600 காளைகள் சீறிப்பாய்ந்தன.. - six hundred bulls
🎬 Watch Now: Feature Video
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள லெட்சுமணன்பட்டியில் பச்ச நாச்சியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமன்றி மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த 600 காளைகளும், 300 காளையர்களும் பங்கேற்றனர்.
இந்த ஜல்லிகட்டு 5 சுற்றுகளாக நடைபெற உள்ளது. வாடிவாசலில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்க்கப்படும் காளைகள் துள்ளி குதித்து சீறிப் பாய்ந்து வருவதை காளையர்கள் மல்லுக்கட்டி தழுவினர். இந்த ஜல்லிக்கட்டில் சிறந்த முறையில் காளைகளை தழுவிய காளையர்களுக்கும், நீண்ட நேரம் வீரர்களை திணறடித்து களமாடும் காளைகளுக்கும் சில்வர் பாத்திரங்கள், பேன், மிக்ஸி, குக்கர், வெள்ளி நாணயம், தங்க நாணயம், பணம் உள்ளிட்டவைகள் பரிசாக வழங்கப்பட்டது.