அனுமதியின்றி தண்ணீர் விற்பனை.. தூத்துக்குடியில் 6 ஆழ்துளை கிணறுகளுக்கு சீல்! - நீர் வளத்துறை அதிகாரிகள்
🎬 Watch Now: Feature Video
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே கோரம்பள்ளம் மற்றும் முள்ளக்காடு எனும் கிராமங்கள் உள்ளது. இங்கு பல நாட்களாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பல முறை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது.
இதனிடையே, உதவி நிலவியலாளர் மற்றும் வருவாய் துறை அலுவலர் இன்று திடீரென கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 6 இடங்களில் அரசு அனுமதியின்றி நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்ததை அதிகாரிகள் உறுதி செய்தனர்.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட ஆழ்துளை கிணறுகளை மூடக்கோரி மாவட்ட அளவிலான நிலநீர் தடுப்பு கண்காணிப்பு குழுவிற்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து நீர் வளத்துறை அதிகாரிகள் கோரம்பள்ளம், முள்ளக்காடு பகுதிகளில் இருந்த ஆறு சட்டவிரோத ஆழ்துளை கிணறுகளை மூடிய அதிகாரிகள் அவற்றிற்கு சீல் வைத்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் வங்கி மேலாளரை தாக்கிய தந்தை மகன் கைது