சிவகங்கை வடமாடு மஞ்சுவிரட்டு! - சிவகங்கை வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி
🎬 Watch Now: Feature Video
சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே அரண்மணை சிறுவயல் கிராமத்தில், கோயில் திருவிழாவை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் மொத்தம் 14 காளைகள் பங்கேற்ற நிலையில், 126 மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்க களமிறங்கினர். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ஐந்து மாடுகள், பிடி மாடுகளாக அறிவிக்கப்பட்டன. போட்டியின்போது காளைகள் முட்டியதில் ஐந்திற்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர். இப்போட்டியை சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்துவந்த 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உற்சாகமாகக் கண்டுகளித்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST