தேனியில் விஜயகாந்திற்கு அனைத்துக் கட்சியினர் மௌன அஞ்சலி ஊர்வலம்!
🎬 Watch Now: Feature Video
தேனி: தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். இதனையடுத்து, சென்னை தீவுத்திடலில் அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, பல்வேறு கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்திய பின், அரசு மரியாதையுடன் தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, தேனி மாவட்ட தேமுதிகவினர் மொட்டை அடித்து, அவரது உருவப்படத்தை வைத்து மௌன அஞ்சலி ஊர்வலம் நடத்தினர். மேலும் இந்த ஊர்வலத்தில் தேமுதிக, திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, அமமுக உள்ளிட்ட பல கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் என சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு, சட்டையில் கருப்பு பட்டை அணிந்து ஊர்வலமாக நடந்து சென்றனர்.
தேனி பொம்மையகவுண்டன்பட்டியில் தொடங்கி பழைய பேருந்து நிலையம் வரை சுமார் ஐந்து கிலோ மீட்டர் ஊர்வலமாகச் சென்று விஜயகாந்திற்கு மௌன அஞ்சலி செலுத்தினர்.