தனியார் ஆலையில் ரேஷன் அரிசி மூட்டைகள்: தீவிர விசாரணையில் வருவாய்த்துறை! - வட்ட வழங்கல் அலுவலர் கண்ணன்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/30-06-2023/640-480-18882799-thumbnail-16x9-ration.jpg)
திருப்பத்தூர்: வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள தனியாருக்குச் சொந்தமான மாவு அரைக்கும் ஆலை இயங்கி வருகிறது. இதில் அடிக்கடி ரேஷன் அரிசி மூட்டைகள் அரைப்பதாக வட்ட வழங்கல் அதிகாரி கண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் வட்ட வழங்கல் அலுவலர் கண்ணன் தலைமையிலான வருவாய்த் துறையினர், மாவு அரைக்கும் ஆலைக்குச் சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது மிஷன் வளாகத்தில் சுமார் 30 மூட்டைகளில் 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகள், அரைக்க வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 30 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை வருவாய்த் துறையினர் நுகர் பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து அரிசி கொண்டு வந்தது யார், எங்கிருந்து இவ்வளவு ரேஷன் அரிசி வந்தது என வட்ட வழங்கல் அலுவலர் கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: குதிரை மீது கொடூர தாக்குதல்; நெல்லையில் நடந்த வெறிச்செயல்!0165148282282449