Video: சாலையைக் கடக்க சிரமப்பட்ட கர்ப்பிணி - கயிறுகட்டி கடக்க உதவிய மீட்புக்குழு - டேராடூனுக்கு அனுப்பட்டார்
🎬 Watch Now: Feature Video
உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் சாலைகள் பெரும் சேதம் அடைந்துள்ளன. இந்நிலையில் ஆற்றின் வடிகால் தூர்வரப்பட்டு வருகிறது. இதனால் வாய்க்கால்கள் அனைத்தும் நீர் நிரம்பி சாலையைக் கடக்க முடியாத நிலையில் உள்ளது. இதனையடுத்து சாலையைக் கடக்க முடியாமல் சிரமப்பட்ட கர்ப்பிணி ஒருவரை அம்மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் காப்பாற்றியுள்ளனர். இது குறித்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் SDRF குழுவினர் அந்த பெண்ணை கயிற்றின் உதவியால் நிரம்பி வழியும் வாய்க்காலைக் கடக்கச் செய்கின்றனர். வடிகாலைக் கடந்த பிறகு, அப்பெண் சிகிச்சைக்காக சாலை வழியாக டேராடூனுக்கு அனுப்பப்பட்டார். கனமழை காரணமாக, குமால்டா பகுதிக்கு உட்பட்ட சீதாபூர் கிராமத்தில் உள்ள இரண்டு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மீட்புக்குழுவினர் தொடர்ந்து மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST