பாதுகாப்பற்ற முறையில் பயணித்த பள்ளி மாணவர்கள் சென்ற வாகனத்தை வழிமறித்த ஆட்சியர்..! அடுத்து நடந்தது என்ன? - பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம்
🎬 Watch Now: Feature Video
Published : Dec 16, 2023, 10:37 PM IST
பெரம்பலூர்: வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் இன்று (டிச.16) தழுதாழை சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியே பள்ளி மாணவ மாணவிகள் வாகனத்தில் ஆபத்தான முறையில் அழைத்துச் செல்லப்படுவதைப் பார்த்த மாவட்ட ஆட்சித் தலைவர் அந்த வாகனத்தை வழிமறித்து ஓட்டுநரை அழைத்து ஏன் குழந்தைகளை இப்படி அழைத்துச் செல்கின்றீர்கள் என விசாரித்தார். அதற்கு, மாணவர்கள் தழுதாழை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், அன்னமங்கலத்தில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருவதாகவும் தேர்வு முடிந்து அவர்களை அவர்களை அழைத்துச்செல்வதாகவும் தெரிவித்தார்.
மேலும், இயல்பாகப் பள்ளி செயல்படும் நேரங்களில் சென்று வருவதற்கு அரசு பேருந்துகள் இருப்பதாகவும் அரையாண்டு தேர்வு நடைபெறுவதால் மதிய நேரம் என்கிற காரணத்தால் அழைத்துச்செல்வதாகத் தெரிவித்தார். இதைக்கேட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் உரியப் பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் இது போன்ற ஆபத்தான முறையில் பள்ளி மாணவ மாணவிகளை அழைத்துச் செல்வது குற்றம். குழந்தைகள் நலன் கருதி இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் எனக் கண்டித்தார். மேலும், மாணவர்களுக்கு மாற்று வாகனம் ஏற்பாடு செய்து பாதுகாப்பாக அழைத்துச்செல்ல அங்கிருந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.