Video: வெள்ளத்தில் சிக்கிய பள்ளி பேருந்து - 25 மாணவர்கள் பத்திரமாக மீட்பு! - தெலங்கானாவில் மழை

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 8, 2022, 4:21 PM IST

Updated : Feb 3, 2023, 8:24 PM IST

தெலங்கானாவில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஆங்காங்கே சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இந்தநிலையில், மகபூப்நகர் மாவட்டம், ராமச்சந்திராபுரம் மற்றும் சூகுருகட்டா பகுதியிலிருந்து 25 மாணவர்களை ஏற்றிக் கொண்டு தனியார் பள்ளி பேருந்து சென்றது. மச்சன்பள்ளி-கோடூர் இடையே உள்ள பாலத்தில் மழை நீர் தேங்கியிருந்த நிலையில் பேருந்து அதில் சிக்கிக் கொண்டது. இதையடுத்து அப்பகுதி மக்கள் பேருந்தில் இருந்த மாணவர்களை பத்திரமாக மீட்டு, பேருந்தையும் அப்புறப்படுத்தினர்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.