வாணியம்பாடி அருகே பற்றி எரிந்த பள்ளி பேருந்து.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பள்ளி மாணவர்கள்..! - திருப்பத்தூர் செய்திகள்
🎬 Watch Now: Feature Video
Published : Jan 10, 2024, 9:20 PM IST
திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியில் இயங்கி வரும் தனியார் மேல் நிலைப் பள்ளியிலிருந்து 42 மாணவர்கள் பள்ளி முடித்துவிட்டு பள்ளி பேருந்து மூலம் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது பள்ளி வேன் சுண்ணாம்பு பள்ளம் பகுதி அருகே வந்து கொண்டிருந்த போது வேனிலிருந்து புகை வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பேருந்து ஓட்டுநர் கோவிந்தராஜ் மற்றும் கிளீனர் பிலிப் பள்ளி மாணவர்களைப் பேருந்திலிருந்து உடனடியாக வெளியேற்றியுள்ளனர். இதனால் பள்ளி மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் பள்ளி பேருந்து தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இந்நிகழ்வு குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆலங்காயம் தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதற்குள் தீ முழுவதும் பரவி பள்ளி பேருந்து முற்றிலும் எரிந்து நாசமாகியது. மேலும் பள்ளி மாணவர்களின் புத்தகங்களும் தீயில் எரிந்து நாசமாகிய நிலையில், இத்தீவிபத்து குறித்து ஆலங்காயம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.