ஜாதி, மதங்களைக் கடந்து தேவாலயத்தில் கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல்! - Pudukkottai news
🎬 Watch Now: Feature Video
Published : Jan 16, 2024, 4:22 PM IST
புதுக்கோட்டை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னதாக பல்வேறு பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவகங்களில் 'சமத்துவ பொங்கல்' கொண்டாடடப்பட்டது. இதனைத்தொடர்ந்து, ஆலயங்கள் உள்ளிட்ட இடங்களில் சாதி மதம் கடந்து அனைவராலும் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.
தற்போது புதுக்கோட்டை மாவட்டம், மெய்வழிச்சாலையில் உள்ள பொன்னுரங்க தேவாலயத்தில் மதங்களைக் கடந்து, சாதிகளைக் கடந்து அனைத்து சுமார் 69 சாதிகளை சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து இந்த பொங்கல் விழாவை கோலகலமாக கொண்டாடினர். இதில் அப்பகுதி வெளிநாட்டு தமிழ் மக்கள், வெளிமாநிலத்தில் உள்ள தமிழர்கள் உட்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இப்பொங்கல் விழாவை வெகு சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
மேலும் இவ்விழாவில் முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான விஜயபாஸ்கர் கலந்து கொண்டு சிறப்பித்தார். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், இந்தியாவிலேயே இதுபோன்ற இறை வழிபாடு எங்கும் இல்லை எனவும், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில், பொன்னுரங்க தேவாலயத்தில் பொங்கல் விழா நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.