"சாதி வன்முறையைத் தூண்டும் மருத்துவர் ராமதாஸ்" பிசிஆர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க விசிக புகார்! - ராமதாஸ்
🎬 Watch Now: Feature Video
சேலம்: விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோயிலில் பட்டியல் சமூகத்தினருக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் கோயிலுக்கு சீல் வைத்து, காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனிடையே மேல்பாதி கோயில் மோதல் தொடர்பாக விமர்சித்து பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீது வன்னியர் சங்கம் சார்பில் சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 4 இல் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இது ஒருபுறம் இருக்க, சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர மாவட்ட பொருளாளர் காஜாமைதீன் தலைமையில், பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் மற்றும் வழக்குரைஞர் பாலு ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி புகார் கொடுக்கப்பட்டது.
அந்த புகார் மனுவில், "பாமக நிறுவனர் ராமதாஸ் தூண்டுதலின் பேரில், திரெளபதி அம்மன் கோயிலில் கூடியிருந்த மக்கள் மத்தியில் நீண்ட காலமாக கடைபிடிக்கும் தீண்டாமையை தொடர்ந்து வலியுறுத்தும் வகையில் பேசிய பாமகவைச் சேர்ந்த வழக்குரைஞர் பாலு மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.