ரேஷன் கடைக்கு திடீர் விசிட் அடித்த ராணிப்பேட்டை ஆட்சியர்.. தரமற்ற பருப்பு வழங்கியதால் கண்டிப்பு! - Ranipet Collector
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/04-01-2024/640-480-20425147-thumbnail-16x9-rani.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Jan 4, 2024, 11:17 AM IST
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த குட்டியம் கிராமத்தில் உள்ள நியாய விலைக்கடையில் நேற்று (ஜன.3) பொதுமக்கள் ரேஷன் பொருட்களை வாங்கிக்கொண்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி ஆய்வுக்கு சென்ற போது திடீரென அந்த நியாய விலைக் கடையில் ஆய்வு செய்தார்.
அப்போது பொதுமக்களுக்கு வழங்கப்படும் துவரம் பருப்பு, தரம் குறைவாக உள்ளதை அறிந்த மாவட்ட ஆட்சியர், உடனடியாக அதனை மாற்றி தரமான பருப்பை விநியோகம் செய்ய விற்பனையாளரை கண்டித்து அறிவுறுத்தினார்.
அதற்கு விற்பனையாளர் எங்களுக்கு விற்பனைக்கு கொடுக்கப்படும் பருப்பு, இந்த தரத்தில்தான் உள்ளது என குற்றம்சாட்டினார். அதற்கு பதிலளித்த ஆட்சியர் குடோனில் எடுக்கும் போதே, இப்படிப்பட்ட தரம் குறைந்தப் பொருட்களை வாங்காமல் வந்திருக்க வேண்டும் என்றார்.
மேலும், நியாய விலைக்கடையில் பொருட்களின் இருப்பு குறித்தும் ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், அன்பரசன், தாசில்தார் இந்துமதி, வருவாய் ஆய்வாளர் ஜெகநாதன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.