தாயமங்கலத்தில் அனல் பறந்த 'ரேக்ளா ரேஸ்' - தாயமங்கலத்தில் அனல் பறந்த ரேக்ளா ரேஸ்
🎬 Watch Now: Feature Video
சிவகங்கை மாவட்டம், தாயமங்கலத்தில் இன்று (ஜன.21) மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 38 ஜோடி மாடுகள் பங்கேற்றன. 2 பிரிவுகளாக நடந்த போட்டியில், பெரிய மாட்டுவண்டிக்கு 8 மைல் தூரமும், சிறிய மாட்டுவண்டிக்கு 6 மைல் தூரமும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
முதல் 4 இடங்களை பிடித்த மாட்டு வண்டி உரிமையாளருக்கும், சாரதிக்கும் ரொக்க பரிசுடன் கோப்பை மற்றம் குத்து விளக்குகள் பரிசாக வழங்கப்பட்டன. முன்னதாக போட்டியை மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினர் தமிழரசி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST