பத்ரிநாத் கோயிலில் ரஜினிகாந்த் சாமி தரிசனம்!
🎬 Watch Now: Feature Video
உத்தராகண்ட்: ஜெயிலர் திரைப்பட வெளியீட்டையொட்டி இமயமலை சுற்றுப்பயணம் மேற்கொண்ட நடிகர் ரஜினிகாந்த், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். பத்ரி விஷாலை தரிசனம் செய்த பிறகு மனம் திருப்தி அடைந்து நிறைவாக இருப்பதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
பின்னர் அவரைக் காண வந்த ரசிகர்கள் உடன் அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டார். முன்னதாக சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்குச் சென்று குருக்களைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றதுடன், அவர்களின் ஆன்மீக உரைகளைக் கேட்ட ரஜினிகாந்த், அங்கு சிறப்புரை ஆற்றினார்.
கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி, இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் கடந்த உலகம் முழுவதும் சுமார் 7,000 திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், இமயமலை சுற்றுப்பயணம் மேற்கொண்ட ரஜினிகாந்த், அங்கு ஒரு வாரம் முகாமிட்டு பத்ரிநாத், கேதர்நாத், பாபாஜி குகை உள்ளிட்ட புனிதத் தலங்களுக்கும் சென்று ஆன்மீக தரிசனம் மேற்கொண்டு வருகிறார். அவரின் ஆன்மிகப் பயனத்தின்போது வெளியான புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
ரஜினிகாந்த் 2010ஆம் ஆண்டு வரை தனது ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், இமயமலைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக இடையில் சில ஆண்டுகளாக அவர் இமயமலை செல்வதை தவிர்த்து வந்தார். கடந்த 2018ஆம் ஆண்டு காலா படப்பிடிப்புக்குப் பிறகு, தற்போது 4 ஆண்டுகள் கழித்து மீண்டும் இமயமலை பயணம் மேற்கொண்டுள்ளார்.
ரஜினிகாந்த் இமயமலையில் இருந்து சென்னை திரும்பிய பிறகு ’தலைவர் 170’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்து முடித்த மற்றொரு திரைப்படமான லால் சலாம், ரிலீசுக்கு தயாராகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னையில் நடைபெறவிருந்த ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி ரத்து!