கழிவுநீர் கால்வாய் விரைவில் அமைத்திட பொதுமக்கள் கோரிக்கை - sengam news
🎬 Watch Now: Feature Video
திருவண்ணாமலை: செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வது வார்டு பகுதியில் கழிவு நீர் கால்வாய் அமைப்பதற்காக கடந்த 20 நாட்களுக்கு முன்பு பேரூராட்சி நிர்வாகம் சார்பாக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இது வரையிலும் கழிவு நீர் கால்வாய் பணிகள் அமைப்பதற்கான வேலைகள் நடைபெறவில்லை எனவும் ஆபத்தான முறையில் பள்ளம் இருக்கின்றது என பொதுமக்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் பள்ளி செல்லும் சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுகின்றனர்.
மேலும் ,இதே வழியில் தனியார் மருத்துவமனை நிர்வாகம் பொதுமக்கள் செல்லும் பாதையை ஆக்கிரமித்து சுற்றுச்சூழல் சுவர் அமைக்கும் பணிக்காக 10 அடி ஆழம் பள்ளம் தோண்டி உள்ளது. ஒரே பாதையில் இரு பள்ளங்கள் இருப்பதால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் செல்வதற்கு கடும் சிரமமாக உள்ளத.மேலும் பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் இது வரையிலும் பணிகள் துவங்கப்படவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டிகின்றனர்.
பேரூராட்சி நிர்வாகம் விரைந்து கால்வாய் அமைக்கும் பணியை துவங்க வேண்டும் எனவும் பொது வழி பாதையை ஆக்கிரமித்து மருத்துவமனை நிர்வாகம் சுற்று சுவர் அமைக்க பள்ளம் தோண்டி உள்ளது. இது தொடர்பாக தனியார் மருத்துவமனை மீது தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:வேலூரில் தொடர் வேட்டை ஆரம்பம் ..கள்ளச்சாராயம் தொடர்பான வழக்கில் 7 பேர் கைது