உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் திருவிழா! - உறையூர் வெக்காளியம்மன்
🎬 Watch Now: Feature Video
திருச்சி: தமிழ்நாட்டில் உள்ள அம்மன் ஆலயங்களில் சிறப்பு வாய்ந்ததும், சோழ மன்னர்களின் குல தெய்வமாகவும், திருச்சி மக்களின் காவல் தெய்வமாகவும் பிரசித்தி பெற்றது உறையூரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு வெக்காளியம்மன் ஆலயம். மக்களின் குறைதீர்க்கும் விதமாக மேற்கூரையின்றி அருள்பாலித்து வரும், இந்த ஆலயத்தில் அம்மனுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்தால் திருமணத்தடை மற்றும் புத்திர தோஷம் நீங்கும் என்பது இந்த ஊர் மக்களின் ஐதீகம்.
பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் இன்று பூச்சொரிதல் விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. முன்னதாக கோயில் நிர்வாகம் சார்பில் உதவி ஆணையர் ஞானசேகரன் தலைமையில் ஊழியர்கள் கிராம மக்கள் உள்ளிட்ட பெருந்திரளான பக்தர்கள் மேளதாளங்கள் முழங்கிட பூக்களை கூடைகளில் ஊர்வலமாகக் கொண்டு வந்து அம்மனுக்குச் சாத்தப்பட்டுச் சிறப்பு பூஜை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, பக்தர்கள் கொண்டு வரும் பூக்கள் யாவும் அம்மனுக்குச் சாத்தப்பட்டது. திருச்சி மற்றும் பல மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனுக்குக் கூடைகளில் பூக்களைக் கொண்டு வந்து சாத்தி வழிபாடு செய்தும், விளக்குகளை ஏற்றியும் வழிபாடு செய்தனர். அதே நேரம் அம்மனுக்கு சாத்தபட்ட பூக்களை மீண்டும் பக்தர்களுக்கே பிரசாதமாக அளிக்கப்பட்டு வருகிறது.