வேலூர் விஐடியில் ‘கிராமத்தில் ஒரு நாள்’ பொங்கல் விழா கோலாகலம்!
🎬 Watch Now: Feature Video
வேலூர்: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, காட்பாடியில் உள்ள வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. இதில், ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு தமிழர் முறைப்படி, பொங்கல் வைத்து கொண்டாடினர்.
இதில், காட்டு யானம், கருப்பு கவுனி, முல்லை கவுனி உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய அரிசியைக் கொண்டு பொங்கல் வைத்தனர். இதில், சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பொங்கல் விழாவைனை சிறப்பாகக் கொண்டாடினர். மேலும், இந்த நிகழ்ச்சியில் கரகாட்டம், பொய்க்கால் குதிரை, தேவராட்டம், பறை இசை ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு ஆட்டங்களுடன் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
இந்த பொங்கல் விழாவில் கானா பாடகர் வேல்முருகன் கலந்துகொண்டு கிராமியப் பாடல்களைப் பாடினார். இதில், விவசாயிகள் பயன்பெறும் வகையில், உழவர் கையேடு புத்தகங்களும் வெளியிடப்பட்டது. மேலும், இந்த பொங்கல் கிராமத்தில் வைத்தால் எவ்வாறு இருக்குமோ, அதை போல் மாடுகள், கோழிகள், வாத்துகள் ஆகியவைகளுடன் குடில் அமைத்தும், அம்மி, உலக்கை மற்றும் வேளாண் உபகரணங்களுடன் "கிராமத்தில் ஒரு நாள்" என பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.