காவலர்கள் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா! குடும்பத்துடன் பங்கேற்ற அதிகாரிகள்..! - பெரியகுளம்
🎬 Watch Now: Feature Video
Published : Jan 15, 2024, 2:56 PM IST
தேனி: பண்டிகை காலங்கள் என்றாலே காவல்துறை அதிகாரிகளுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். அதனால் அவர்களால் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளின் போது தங்களுடைய குடும்பங்களுடன் இணைந்து அவற்றைக் கொண்டாடுவது என்பது பெரும்பாலும் காவலர்களுக்கு முடியாததாக இருக்கும்.
இதனிடையே, துறை சார்ந்த அலுவலகங்களில் பொங்கல் பண்டிகைகளுக்கு முன்னதாக சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்த தென்கரை காவல் நிலையத்தில் காவல்துறை அதிகாரிகள், காவல் நிலையத்தில் அவரவர் குடும்பத்தாருடன் ஒன்று கூடி பொங்கல் கொண்டாடிய நிகழ்வு நடந்துள்ளது.
அதாவது, தென்கரை காவல் நிலயத்தில் பணி புரியும் அனைத்து காவலர்கள், ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் பெண் காவலர்கள் என அவனைவரும் அவரவர்களின் குடும்பத்தினரோடு காவல் நிலையம் முன்பாக இன்று (ஜன.15) பொங்கல் வைத்து, தெய்வங்களுக்கு படையலிட்டு, கொண்டாடி மகிழ்ந்தனர்.
மேலும், இந்த விழாவில் பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சக்திவேல் சிறப்பி அழைப்பினராக பங்கேற்ற காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் அனைவருக்கும் பொங்கல் வழங்கி, வாழ்த்து பரிமாறிக் கொண்டார். மேலும், பொங்கல் கொண்டாட்டத்தை முன்னிட்டு காவல் நிலையத்தை வண்ண தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.