திருப்பத்தூரில் ஏடிஎம் மெஷினை உடைத்து கொள்ளை முயற்சி! - Tirupathur district news
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் கசிநாயக்கன்பட்டியில் தனியார் ஏடிஎம் மையம் (இண்டிகேஷ்) இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் இந்த ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ஏடிஎம் இயந்திரத்தில் வைக்கப்பட்டிருந்த பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர்.
ஆனால், ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததால் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த கந்திலி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். மேலும் ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டது குறித்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இந்த ஏடிஎம் மையத்தில் காவலாளி மற்றும் சிசிடிவி கேமரா ஏதும் இல்லை என்பதை நோட்டமிட்டே ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சித்துள்ளனர். இதனையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஏடிஎம் இயந்திரத்தில் பதிவான கைரேகைகளை எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல்துறை சார்பில் ஏற்கனவே பலமுறை அனைத்து ஏடிஎம் மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என அறிவுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த ஏடிஎம் மையத்தில் சிசிடிவி கேமரா இல்லாதது ஏன்? காவலாளி ஏன் நியமிக்கப்படவில்லை என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.