போதை ஏறி போச்சு! திருடுவதற்கும் வசதியாக மாறி போச்சு! - மதுபோதை ஆசாமியிடம் செயின் திருடும் வீடியோ வைரல்! - கழுத்தில் இருந்த செயினை கழற்றிய ஆசாமி
🎬 Watch Now: Feature Video
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையப் பகுதியில் பார் வசதியுடன் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் கடை மதுபானக்கூடத்தில் கடந்த மார்ச் 11ஆம் தேதி அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் மது அருந்தி விட்டு மயக்கத்தில் இருந்து உள்ளார். அப்போது அவரது இருக்கை எதிரே அமர்ந்து இருந்த நபர், மது போதை மயக்கத்தில் இருந்த நபரின் கழுத்தில் இருந்த இரண்டு சவரன் செயினை பறித்து சென்று உள்ளார்.
இதை அறியாத அந்த நபர் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது கழுத்தில், செயின் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, இதுகுறித்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். புகாரைத் தொடர்ந்து மதுபானக் கூடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து உள்ளனர். அதில் மது போதையில் இருக்கும்போது, மற்றொரு நபர் இவரது கழுத்தில் இருந்த செயினை கழற்றுவது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து இந்த சிசிடிவி காட்சிகளை போலீசாரிடம் கொடுத்து, செயினை கழற்றி சென்ற நபரை கண்டுபிடித்து, தர கேட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து சிசிடிவி காட்சியில் உள்ள அந்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.