CCTV: பெட்ரோல் பங்க் ஊழியரை சரமாரியாக தாக்கிய போதை ஆசாமிகள்! - பெட்ரோல் பங்க் ஊழியர்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 22, 2023, 5:18 PM IST

பெரம்பலூர் மாவட்டம், அகரம்சீகூர் அடுத்துள்ள கீழப்பெரம்பலூர் கிராமத்தில் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகின்றது. இங்கு கருப்பட்டாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் (வயது 36) என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் மதியம் 2:30 மணியளவில் 2 இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் பெட்ரோல் நிரப்ப வந்துள்ளனர்.

அப்போது பணியில் இருந்த பழனிவேல் பெட்ரோல் நிரப்பி விட்டு பணம் கேட்டுள்ளார். ஆனால் போதை ஆசாமிகள் பணம் தர மறுத்துள்ளனர். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி மூவரும் பழனிவேலை தாக்கியுள்ளனர்.   மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் என்ன நடப்பது என்று தெரியாமலும் கேள்வி கேட்காமலும் பெட்ரோல் பங்க் ஊழியர் பழனிவேலை அவர்களுடன் சேர்ந்து கொடூரமாகத் தாக்கி உள்ளனர்.

தகவல் அறிந்து வந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர்  உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பழனிவேலை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து குன்னம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டபோது  மது போதையில் ஊழியரை தாக்கிய 5 பேரும் கீழப்பெரம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த வினோத், சிவராஜ், அஜித், ஐயப்பன், முத்துக்குமார் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் CCTV காட்சியை வைத்து குன்னம் காவல்துறையினர்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.