ஆடிப்பெருக்கை முன்னிட்டு பேரூர் படித்துறையில் ஏராளமானோர் வழிபாடு! - பேரூர் படித்துறை
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/03-08-2023/640-480-19169905-thumbnail-16x9-aadi.jpg)
கோயம்புத்தூர்: வருடந்தோறும் ஆடி மாதம் 18ஆம் தேதி ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ஆற்றங்கரை பகுதிகளில் பொதுமக்கள் கூடி ஆடிப்பெருக்கை கொண்டாடுவர். இன்றைய தினம் (ஆகஸ்ட் 3) நீர் ஆதாரங்கள் பெருகி விவசாயம் செழிக்க வழிபாடு நடத்தப்படும்.
அதேசமயம், இந்த தினத்தில் இறந்து போன குழந்தைகள், திருமணம் ஆகாத பெண்கள், மற்றும் பெரியோர் ஆகியோருக்கு படையல் வைத்து வழிபடுவது வழக்கம். பெரும்பாலும் இவை அனைத்தும் ஆற்றுப்படுகையில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, கோவையில் பேரூர் படித்துறையில் ஆடிப்பெருக்கு வழிபாடு நடைபெற்று வருகிறது. அதனையொட்டி ஏராளமானோர் கலந்து கொண்டு இறந்தவர்களுக்கு படையல் வைத்து வழிபாடு செய்தனர். மேலும், சிலர் நீர் ஆதாரங்கள் பெருக வேண்டி வழிபாடு நடத்தி வருகின்றனர்.
மேலும், பேரூரில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வழிபாடு நடத்துவதற்கு போதுமான இட வசதிகள் இல்லை என பொதுமக்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து வழிபாடு நடத்துவதற்கான வசதிகளையும், சரிவர ஏற்பாடு செய்யவில்லை என சில பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.