”கள்ளச்சாராயம் விற்றால் கைது செய்யப்படுவார்கள்” ஒலிப்பெருக்கி மூலம் ஊராட்சி மன்ற தலைவி பிரச்சாரம்
🎬 Watch Now: Feature Video
விழுப்புரம்: மரக்காணம் அருகே விற்பனை செய்யப்பட்ட கள்ளச் சாராயத்தை, எக்கியர்குப்பம் பகுதி மீனவர்கள் அருந்தியுள்ளனர். இதனையடுத்து மீனவர்கள் மயங்கி விழுந்து உயிருக்கு போராடிய நிலையில் அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு முண்டியம்பாக்கம், மரக்காணம் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் சேர்த்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் விஷச் சாராயம் அருந்தி 13 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கிராம ஊராட்சிகளில் ஒலி பெருக்கி மூலம் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட கூடாதென அறிவுறுத்துமாறு ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அரசு உத்தரவிடப்பட்டது.
அந்த உத்தரவின் பேரில் சேந்தனூர் ஊராட்சி மன்ற தலைவி சுதா ஒலிப்பெருக்கி மூலம் சாராயம் விற்பனை செய்ய கூடாது என வீதிவீதியாக பிரச்சாரம் செய்தார். மேலும் அவ்வாறு கள்ளச் சாராயம் விற்பனை செய்பவர்கள் உடனடியாக காவல் துறையினர் மூலம் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: Illicit liquor deaths: விஷச்சாராய பலி விவகாரம் - விசாரணையைத் தொடங்கியது சிபிசிஐடி!