திருமயம் அருகே களைகட்டிய மாட்டு வண்டி பந்தயம்.. ஆரவாரத்துடன் கண்டுகளித்த பொதுமக்கள்! - bullockcart race in pudukottai
🎬 Watch Now: Feature Video
புதுக்கோட்டை: திருமயம் அருகே உள்ள இளஞ்சாவூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. இதில் மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 19 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்துக் கொண்டன.
பெரிய மாடுகள், சிறிய மாடுகள் என இரு பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 6 ஜோடி மாட்டு வண்டிகளும், சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் 13 ஜோடி மாட்டு வண்டிகளும் கலந்துக் கொண்டன. பெரிய மாட்டு வண்டி பந்தயத்தை பொறுத்தவரையில் மேலும், கீழுமாக மொத்தம் 12 கிலோ மீட்டர் தூரமும், சிறிய மாட்டு வண்டிக்குப் மொத்தம் 9 கிலோமீட்டர் தூரமும் எல்லைகளாக நிர்ணயிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது.
இந்தப் பந்தயத்தில் கலந்துக் கொண்ட மாட்டு வண்டிகள் சாலையில் துள்ளிக்குதித்து ஒன்றையொன்று முந்திச்சென்றது. அந்நிகழ்வுப் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. வழி நெடுகிலும் சாலையின் இரு புறங்களிலும் நின்றிந்த ஏராளமான பொதுமக்கள் போட்டியை கண்டு ரசித்தனர். மாட்டு வண்டிப் பந்தயத்தில் முதல் நான்கு இடங்களைப் பெற்ற உரிமையாளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.