99ஆம் ஆண்டு லட்சுமி நரசிம்மர் வீதி உலா: ஆட்டம் பாட்டத்துடன் மக்கள் கொண்டாட்டம்! - Kondasamudram
🎬 Watch Now: Feature Video
Published : Sep 23, 2023, 5:58 PM IST
|Updated : Sep 23, 2023, 10:21 PM IST
வேலூர்: புரட்டாசி மாதம் முதலாம் சனிக் கிழமையை முன்னிட்டு 99ஆம் ஆண்டாக இன்று (23.09.2023) கொண்டசமுத்திரம் பகுதி லட்சுமி நரசிம்மருக்கு அபிஷேகம், தீபாராதனை உடன் வீதி உலா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கொண்டசமுத்திரம் பகுதியில் மிகவும் பழமையான லட்சுமி நரசிம்மர் கோயில் ஒன்று உள்ளது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 1ஆம் சனிக்கிழமை அன்று ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி வீதி உலா நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் 99 ஆம் ஆண்டாக இன்று (செப்.23) இந்த ஆண்டுக்கான ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி வீதி உலா மற்றும் லட்சுமி நரசிம்ம ஸ்வாமி பெருவிழா நடைபெற்று வருகிறது.
கோயிலில் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. மேலும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் நாட்டுப்புறக் கலைஞர்கள் பக்தி பாடல்கள் பாடி, நடனம் ஆடியபடி வீதி உலாவில் சென்றனர். தொடர்ந்து பெண்களும் பாட்டுப்பாடி, நடனமாடினர்.