வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு பீர்க்கன்காரணை காவல் நிலையம் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு..! - தூத்துக்குடி வெள்ளம்
🎬 Watch Now: Feature Video
Published : Dec 26, 2023, 9:33 PM IST
சென்னை: வளிமண்டல சுழற்சி காரணமாக, தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதி கனமழை பெய்தது. இந்த கனமழையால் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி உட்பட நான்கு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. இதில், தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கன மழையால், குளங்கள் உடைபட்டு பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது. மேலும், பல கிராமங்களில் வெள்ள நீரில் மூழ்கின.
இந்நிலையில் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டம், காளான் கரை என்ற கிராம மக்களுக்குச் சென்னை தாம்பரம் மாநகர காவல் எல்லையில் உள்ள பீர்க்கன்காரணை காவல் நிலையம் சார்பில், காவல் ஆய்வாளர் நெடுமாறன் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் இன்று(டிச.26) அனுப்பி வைக்கப்பட்டது.
இதில் அரிசி, தண்ணீர் பாட்டில், போர்வை, நாப்கின், பிரட், எண்ணெய், பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் என சுமார் 500 குடும்பங்களுக்குப் பயன்படும் வகையில் சுமார் பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.