Video: சென்னையில் மின்சார கம்பி மீது நின்று தீயணைப்புத்துறைக்கு போக்கு காட்டிய மயில்!! - சென்னை மாவட்ட செய்தி
🎬 Watch Now: Feature Video
சென்னை: கோட்டூர்புரம் வெள்ளையன் தெருவில் பல்வேறு அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. இன்று பிற்பகல் வழி தவறி பறந்து வந்த மயில் ஒன்று வெள்ளையன் தெருவில் உள்ள தனியார் அலுவலகத்தில் அமைந்துள்ள மின்சார ட்ரான்ஸ்பார்மர் மீது அபாயகரமாக பல மணி நேரம் அமர்ந்திருந்தது.
உடனே அங்கிருந்த பொதுமக்கள் காவல் துறைக்கும் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைக்கும் மின்வாரிய அலுவலகத்துக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து மின்சாரத்தை நிறுத்திவிட்டு அந்த மயிலை மீட்க முயன்றனர். ஆனால், தீயணைப்புப் படை வீரர் மயிலைப் பிடிக்க மேலே ஏறும் போது, மயில் அங்கிருந்து பறந்து தப்பித்தது.
இதையும் படிங்க: பணி நிரவல் கலந்தாய்வில் உள்ள குளறுபடிகளை சரி செய்த பின்பு நடத்தக் கோரிக்கை!
இதனால் கோட்டூர்புரத்தில் பரபரப்பு நிலவியது. மயில் ஆபத்து நிலையில் இருப்பதாக நினைத்து விரைந்து வந்த தீயணைப்பு துறைக்கு போக்கு காட்டிய நிகழ்வு சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: ஆதம்பாக்கத்தில் துக்க நிகழ்வில் கலந்து கொண்ட நபர் வெட்டிக் கொலை; போலீஸ் விசாரணை