Tiruvannamalai: இது குடைக்குள் மழை அல்ல; பேருந்துக்குள் குடை: அரசுப்பேருந்தின் அவல நிலை - பேருந்துக்குள் குடை பிடித்து சென்ற பயணிகள்
🎬 Watch Now: Feature Video
திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், மேல்மருவத்தூரில் இருந்து வேலூருக்குச் சென்று கொண்டிருந்த அரசுப்பேருந்து ஒன்று வந்தவாசியில் கனமழையில் சிக்கிக் கொண்டது. அந்தப் பேருந்தின் மேல் கூரை மோசமான நிலையில் இருந்ததால், மழைநீர் பேருந்துக்கு உள்ளே ஒழுக ஆரம்பித்தது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். பேருந்து முழுவதுமே மழைநீர் ஊற்றிக் கொண்டே இருந்ததால், பயணிகள் தலையில் பிளாஸ்டிக் கவர் அணிந்தபடி பயணம் செய்தனர்.
மேலும் சிலர், பேருந்துக்கு உள்ளேயே குடை பிடித்தபடி பயணம் செய்யும் அவல நிலை ஏற்பட்டது. அரசுப் பேருந்துகள் முறையாகப் பராமரிக்கப்படாத காரணத்தால், இது போன்ற மோசமான நிலையில் இருப்பதாகவும், இது போல ஒழுகும் நிலையில் இருக்கும் அரசுப் பேருந்துகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை வைத்தனர். பயணிகள் பேருந்துக்குள் குடை பிடித்தபடி பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
இதையும் படிங்க: CCTV:வேலூரில் அடுத்தடுத்த 3 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு!