தஞ்சை நாகேஸ்வர சுவாமி கோயிலில் பங்குனி உத்திர கொடியேற்றம் - thanjavore
🎬 Watch Now: Feature Video
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பிரன்நாயகி சமேத நாகேஸ்வரசுவாமி திருக்கோயில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தேவாரப்பாடல் பெற்ற தலமாகும். அதோடு 12 சைவத்திருத்தலங்களில் ஒன்றாகும். இங்கு மாசி மாத மகா சிவராத்திரி நாளில் முதல் காலத்தில் வழிபாடு செய்து இழந்த தன் சக்தியை சூரிய பகவான் திரும்ப பெற்றார் என்பது நம்பிக்கை. சித்திரை மாதம் 11, 12, 13 ஆகிய 3 நாட்கள் தன் ஒளிக்கதிர்களால் வழிபாடு செய்யும் தலமாகவும் இது விளங்குகிறது.
பல்வேறு சிறப்புகள் பெற்ற இவ்வாலயத்தில் பங்குனி உத்திர பிரமோற்சவம் பத்து நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதே போன்று இவ்வாண்டுக்கான விழா, இன்று (மார்ச் 26) கொடியோற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கொடி மரத்தின் அருகே எழுந்தருள, கொடி மரத்திற்கு பால் தயிர் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு நந்தியம்பெருமான் வரைப்பட்ட திருக்கோடி நாதஸ்வர மேள தாளம் மற்றும் நந்தி மங்கள வாத்தியங்கள் இசைக்க, வேத மந்திரங்கள் முழங்க, ஏற்றிப்பட்டு, மகா தீபாராதனை செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.