தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் கோயில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்! - நிகரில் முகில்வண்ணன்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/640-480-18241193-thumbnail-16x9-tut.jpg)
தூத்துக்குடி: நவதிருப்பதி கோவில்கள் ஏழாவது திருப்பதியாகவும், சுக்கிரனுக்கு அதிபதியாகவும் விளங்கும் அருள்மிகு மகரநெடுங்குழைக்காதர் திருக்கோவில் தென்திருப்பேரையில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் பங்குனி பெருந்திருவிழா ஆண்டுதோறும் பக்தர்களால் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டிற்கான பங்குனித் திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் கடந்த 9ஆம் தேதி இரவு கருட சேவை நடந்ததைத் தொடர்ந்து 9ஆம் திருவிழாவான இன்று காலை தேரோட்டம் நடந்தது. முன்னதாக சுவாமி நிகரில் முகில்வண்ணன் காலை 7.45 மணிக்குத் திருத்தேரில் எழுந்தருளினார்.
காலை 9 மணிக்குச் சுவாமி நிகரில் முகில்வண்ணன் தேர் வடம் பிடிக்கப்பட்டது. தேரை மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் பார்த்திபன் வடம் பிடித்து இழுத்துத் தொடங்கி வைத்தார். இதனையடுத்து நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்த தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
திருவிழா நாட்களில் தினமும் சுவாமி நிகரில் முகில் வண்ணன் தேவியர்களுடன் பல்வேறு வாகனங்களில் மாடவீதி மற்றும் ரதவீதிகளில் வீதி புறப்பாடு நடைபெற்றது. விழா ஏற்பாடுகளைத் திருக்கோயில் நிர்வாகத்தினர் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆத்தூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு: விவசாயிகள் மகிழ்ச்சி!