palani murugan temple: பழனி முருகன் கோவில் தைப்பூச தேரோட்டம் திருவிழா! - இன்று மாலை தேரோட்டம்
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: பழனியில் தைப்பூச திருவிழா கடந்த 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பெரிய நாயகி அம்மன் கோவிலில் பத்து நாட்கள் நடைபெறும் தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் மற்றும் வெள்ளித்தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
தைப்பூசத்தின் ஏழாம் நாளான இன்று(பிப்.04) மாலை 4.30மணியளவில் நடைபெறவுள்ளது. தேரோட்டத்தை முன்னிட்டு அருள்மிகு முத்துக்குமாரசுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து விநாயகர், நவவீரர்கள் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளும் தேரேறி அமர்ந்தனர். தேரோட்டத்தைத் தொடர்ந்து தேருக்குத் தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து மாலை நான்கு ரதவீதிகளிலும் தேர்பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்துள்ளார்.