Video: மூணாறில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் வலம் வரும் "படையப்பா காட்டு யானை" - Padayappa Wild Elephant Walk
🎬 Watch Now: Feature Video
தேனி மாவட்ட எல்லையை ஒட்டி அமைந்துள்ள கேரள மாநிலத்தின் மூணாறு நகரில் கடந்த சில நாட்களாக படையப்பா மற்றும் கொம்பன் என இரண்டு காட்டுயானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. குடியிருப்புப் பகுதி மற்றும் நகரின் கடைவீதிப் பகுதி ஆகியப் பகுதிகளில் தொடர்ந்து பகல் மற்றும் இரவு வேளையில் உலா வந்து அங்குள்ள பொருட்களை சேதப்படுத்துவதும், வாகனங்களை துரத்துவதும், உணவுப் பொருட்களை எடுத்து உண்பதும், வீடுகளை இடித்து சேதப்படுத்துவதும், வீட்டில் உள்ள பொருட்களை தூக்கி வீசுவதுமாக இரண்டு காட்டு யானைகள் பெரும் அட்டகாசம் செய்து வருகின்றன. நாள்தோறும் படையப்பா மற்றும் கொம்பன் காட்டுயானைகளால் மூணாறு பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உறைந்துள்ளனர்.