கொடியேற்றத்துடன் தொடங்கிய சேத்துப்பட்டு தூய லூர்து அன்னை ஆண்டு பெருவிழா! - தூய லூர்து அன்னை தேவாலயம்
🎬 Watch Now: Feature Video
திருவண்ணாமலை மாவட்டத்தில், 127 ஆண்டுகளுக்கு முன்பு சேத்துப்பட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில், பாரிஸ் நகரத்தை சேர்ந்த தாராஸ் அடிகளாரால் போளூர் சாலையில் விண்ணை முட்டும் கோபுரங்களுடன் தூய லூர்து அன்னை தேவாலயத்தை கட்டினார். வேலூர் மரை மாவட்டத்தில் மிகப்பெரிய திருத்தலமாக விளங்கும், இந்த தூய லூர்து அன்னை தேவாலயத்தின் 128வது ஆண்டு பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
செங்கல்பட்டு மறை மாவட்ட ஆயர்நீதிநாதன் தூய லூதர் அன்னையின் கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக தூய லூர்து அன்னையின் கொடி திருப்பலி பாடியபடி தேவாலயத்தில் வலம் வந்தது. அதனை தொடர்ந்து மின் விளக்குகளால் அலங்கறிக்கப்பட்ட ஆலய வளாகத்தில் பங்கு தந்தையர்கள் சிறப்பு திருப்பலி நடத்தினர்.
கொடியேற்றத்தில் சேத்துப்பட்டு, லூர்து நகர், நிர்மலா நகர், அதனை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இத்திருவிழாவானது தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகின்றது.