தாயின் காலை பிடித்து கதறி அழுத ஓபிஎஸ்.. தாயார் மறைவில் நெகிழ்ச்சி! - ஓ பன்னீர்செல்வம்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/640-480-17844419-thumbnail-4x3-opsdeath.jpg)
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் (95), கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று (பிப்.24) வெண்டிலேட்டர் வைக்கப்பட்டு வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட ஓபிஎஸ்சின் தாயார், இரவு 10 மணியளவில் காலமானார். இதனையடுத்து சென்னையில் இருந்த ஓபிஎஸ், உடனடியாக புறப்பட்டு தேனி வந்தடைந்தார்.
பெரியகுளத்தில் உள்ள அவரது இல்லத்தில் பழனியம்மாளின் உடல் வைக்கப்பட்டிருந்தது. அங்கு வந்த ஓபிஎஸ், அவரது தாயாரின் கால்களை பிடித்து கதறி அழுதார். இதனிடையே ஓபிஎஸ்சின் தாயார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.