திண்டுக்கல்லில் பூத்த பிரம்ம கமலப்பூ - தீபம் காட்டி வழிபட்ட மக்கள் - சமேஸ்வரி
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: பிரம்ம கமலம் அல்லது நிஷகாந்தி என்பது வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இரவில் மலரக்கூடிய அபூர்வ வகை மலர். அப்படி ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கக்கூடிய பூ திண்டுக்கல்லில் பூத்துள்ளது.
திண்டுக்கல் அருகே உள்ள செட்டிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர், சமேஸ்வரி. இவர், தனது வீட்டில் பிரம்ம கமலம் செடியைக் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, நடவு செய்து வளர்த்து வந்துள்ளார். அந்தச் செடியில் கடந்த 20 தினங்களுக்கு முன்பு மூன்று மொட்டுக்கள் வந்துள்ளது.
அதில் ஒரு மலர் நேற்று இரவு 8 மணி முதல் மலரத் துவங்கியது. சுமார் 3 மணி அளவில் முழுவதுமாக பிரம்ம கமலம் மலர் விரிந்து பூத்து அழகாக காட்சியளித்தது. இதை அடுத்து பிரம்ம கமலச்செடியின் முன்பு கோலம் போட்டு, அரிசி, சர்க்கரை, உப்பு, வைத்து பூத்த மலருக்கு சாம்பிராணி புகை காட்டி, தீப ஆராதனை செய்து சாமி கும்பிட்டு வழிபாடு செய்தனர். இதனை அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் பார்வையிட்டு வணங்கிச் சென்றனர்.