மது பாட்டிலுக்கு பாடை, மாலையுடன் நூதன போராட்டம்!
🎬 Watch Now: Feature Video
திருவண்ணாமலை: தமிழகத்தில் மதுவிலக்கை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோரி நாம் தமிழர் கட்சி, மகளிர் பாசறை சார்பில் மது பாட்டிலை வைத்து மாலையிட்டு, பாடை கட்டி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக ஜம்பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் டாஸ்மாக் என அழைக்கப்படும், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழக அரசே முன்னெடுத்து மதுபான கடைகளை நடத்தி வரும் அவல நிலை தொடர்கிறதாகவும், இதன் மூலம் மட்டும் கடந்த ஆண்டு 36 ஆயிரம் கோடிக்கு மேல் வருமானம் ஈட்டி உள்ளதாகவும், இந்தியாவிலேயே மது அருந்தும் மாநிலங்களில் தமிழக முதல் இடத்தில் உள்ளது என்றும். மேலும், பல்வேறு வகையான குற்றங்களுக்கு மதுப்பழக்கம் உடந்தையாகவும், முக்கிய காரணியாகவும் மதுப் பழக்கம் அமைவது மறுக்க முடியாத உண்மையாக உள்ளது என்றும்.
ஆகவே, தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக் கோரி நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை பிரிவின் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை பிரிவின் சார்பில் 50-கும் மேற்பட்டோர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று, தமிழக அரசு உடனடியாக தமிழகம் முழுவதும் மதுவிலக்கை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோரி கோஷங்களை எழுப்பிக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மது பழக்கத்தினால் விபத்துக்கள், குடும்ப சண்டைகள், நண்பர்களுடன் ஏற்படும் மோதல்கள் ஆகியவற்றின் காரணமாகப் பல உயிர்கள் பறிக்கப்படுவதாகும். இத்தனைக்கும் காரணமான மதுவை ஒழிக்க வேண்டும் என கூறி மது பாட்டில்களுக்குச் சாலையில் வைத்து, அதற்கு மாலை அணிவித்து பாடை கட்டி கோஷங்களை எழுப்பிக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: நெல்லையில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக கள் குடித்து நூதன போராட்டம்!