எமர்ஜென்சி படகை வடிவமைத்து திருச்சி என்.ஐ.டி பேராசிரியர் அசத்தல் - எமர்ஜென்சி படகை வடிவமைத்து அசத்தல்
🎬 Watch Now: Feature Video
திருச்சி: தமிழ்நாட்டில் பருவமழை காலங்களில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதுபோன்ற பேரிடரின்போது வீடுகளுக்குள் மழைநீர் புகுவதும், மக்கள் வெள்ளத்தில் சிக்குவதும் தவிர்க்க முடியாததாக உள்ளது. அப்போது வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள், குழந்தைகளை மீட்பது சவால் நிறைந்தது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் படுக்கை, இருக்கையுடன் கூடிய எமர்ஜென்சி படகை (Fureboat) திருச்சி என்.ஐ.டி. பேராசிரியர் முத்துக்குமரன் வடிவமைத்துள்ளார். திருச்சி என்.ஐ.டி. ஆராய்ச்சித்துறை புல முதன்மையரும், உலோகவியல் மற்றும் பொருள்கள் பொறியியல் பிரிவு பேராசிரியருமான இவர், கிட்டத்தட்ட ஒன்றறை ஆண்டு ஆய்வுக்குப் பிறகு இப்படகை வடிவமைத்ததாக கூறியுள்ளார். இதற்கு காப்புரிமை கோரி பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் என்.ஐ.டி.க்கு வந்த மத்திய கல்வி இணை அமைச்சர் சுபாஷ் சர்கார் பேராசிரியரை பாராட்டியுள்ளார். இதை வடிவமைக்க ரூ.15 ஆயிரம் செலவு செய்ததாக அவர் கூறினார்.
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST