இன்ஸ்டாகிராம் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு எஸ்.பி ஆபிஸில் தஞ்சம்! - Instagram love couple
🎬 Watch Now: Feature Video
Published : Oct 3, 2023, 5:11 PM IST
|Updated : Oct 3, 2023, 5:29 PM IST
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் மேல்செங்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூவரசன். தொழிற்படிப்பு முடித்த இவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மேலும், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சௌமியா.
பூவரசன் - சௌமியா இருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி நண்பர்களாக பழகிய நிலையில் நாளடைவில் காதல் மலர்ந்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்த இவர்கள், இரு தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள மகா சக்தி மாரியம்மன் கோயிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இவர்களது திருமணம் பெண் வீட்டாருக்கு தெரிய வந்த நிலையில், தனது குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுப்பதாக குற்றம்சாட்டியுள்ளதோடு, தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனிடம் மனு செளமியா அளித்தார்.
இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகம் ஏற்பட்டு திருமணம் செய்துகொண்ட புதுமண காதல் ஜோடி, உயிருக்கு பாதுகாப்பு கேட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.