CCTV Video: மூடிய கடையில் காய்கறி பர்ச்சேஸ் செய்த இளைஞர்!!
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: வத்தலக்குண்டு அருகே அண்ணா நகரில் மதுரை சாலையில் செந்தில்குமார் என்பவர் காய்கறி கடை வைத்துள்ளார். இந்நிலையில் இவர் கடையில் இரவு நேரங்களில் நாள்தோறும் காய்கறி திருடு போய் உள்ளது. இதனைத் தொடர்ந்து சந்தேகமடைந்த செந்தில்குமார் கடையில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணித்துள்ளார்.
இரவு காய்கறி கடையை பூட்டிய பிறகு தாடியுடன் காணப்பட்ட இளைஞர் ஒருவர் காய்கறி கடைக்குள் பூட்டை உடைத்து கடையில் இருந்த ஒவ்வொரு சாக்கு பையை சாவகாசமாக எடுத்து தனக்கு தேவையான காய்கறிகளை ஒவ்வொன்றாக கடையில் சென்று வாங்குவது போல் தரம் பார்த்து எடுத்து பையினுள் போடுகிறார்.
முட்டைக்கோஸ், வெங்காயம், பச்சை மிளகாய், கேரட், தேங்காய் என தனக்குத் தேவையான காய்கறிகளை மட்டும் சாக்கு பையில் நிரப்பிக் கொண்டு கடையில் இருந்து கிளம்பும் தருவாயில் நிமிர்ந்து பார்த்த போது கேமரா தன்னை கண்காணிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் மன்னிப்பு கூறுவது போல் நெஞ்சில் கை வைக்கும் அந்த இளைஞர், சரி ஆனது ஆச்சு என்ற மனநிலையில் திருடிய காய்கறிகளை எடுத்துக் கொண்டு கடையை விட்டு செல்கிறார்.
இதனைத் தொடர்ந்து காய்கறி கடை உரிமையாளர் செந்தில் குமார் வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் அதே பகுதியில் பாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வரும் இளைஞரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளைஞர் காய்கறி திருடும் சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதையும் படிங்க: விதிமுறைகளை மீறிய திண்டுக்கல் ஐ லியோனி - அபராதம் விதித்த போக்குவரத்து காவல் துறை